/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புத்தாடை,இனிப்பு,பட்டாசு வாங்க மக்கள் குவிந்ததால் மாநகரில் போக்குவரத்து நெரிசல்

ADDED : அக் 30, 2024 01:06 AM
புத்தாடை,இனிப்பு,பட்டாசு வாங்க
மக்கள் குவிந்ததால் மாநகரில் போக்குவரத்து நெரிசல்
ஈரோடு, அக். 30-
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு நாளே உள்ளதால், புத்தடை எடுக்க ஈரோடு மாநகருக்கு மக்கள் நேற்று படையெடுத்தனர். இதனால் மாநகரின் அனைத்து ஜவுளி கடைகள் மற்றும் ஜவுளி சந்தை வணிக வளாகம், சாலையோர கடைகளில் துணி விற்பனை களை கட்டியது. இதேபோல் தற்காலிக பட்டாசு கடை, இனிப்பு கடைகளிலும் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.
இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் மக்கள் வந்ததால் மாநகரில் வாகன போக்குவரத்து அதிகரித்தது. மாலை நேரத்தில் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மாநகரமே ஸ்தம்பித்தது. குறிப்பாக ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா, மேட்டூர் சாலை, பெருந்துறை சாலை, ஸ்வஸ்திக் ரவுண்டானா பகுதிகளில் வாகனங்கள் ஊர்ந்தும், அணிவகுத்தும் சென்றன.
தீபாவளியை முன்னிட்டு, 14 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கடைவீதிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில், 24 சிசிடிவி கேமராக்கள் அமைத்து, எஸ்.பி., அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இருந்தும் போலீசார் கண்காணித்தனர்.