/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கனமழையால் ௨வது முறையாக நிரம்பிய குளம் தரைப்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்

ADDED : அக் 25, 2024 01:00 AM
நம்பியூர்,
நம்பியூர் அருகே வேமாண்டம்பாளையத்தில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான, 66 ஏக்கர் பரப்பிலான குளம் உள்ளது. கடந்த சில நாட்களாக ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் பெய்யும் தொடர் மழையால், நம்பியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி குளங்கள் நிரம்பி
வருகின்றன.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் தத்தனுார், புஞ்சை தாமரைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் வேமாண்டம்பாளையம் குளத்துக்கு நீர்வவத்து அதிகரித்தது. நடப்பாண்டில் நேற்று இரண்டாவது முறையாக நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால் நம்பியூ-புளியம்பட்டி சாலையில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
மழை தொடர்ந்தால் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு பணிகளை, நம்பியூர் தாசில்தார் ஜாகிர் உசேன், நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் லோகநாயகி மற்றும் வரப்பாளையம் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
* பெருந்துறை பகுதியில் நேற்று
காலை முதல் வழக்கம்போல் வெயில் கொளுத்தியது. மாலை, 4:00 மணியளவில் பலத்த மழை பெய்ய தொடங்கியது.
ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது.
இதனால் பள்ளி மற்றும் கல்லுாரி முடிந்து வீடு திரும்பிய மாணவ, மாணவியர் சிரமத்துக்கு
ஆளாகினர்.