/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போக்குவரத்து விதிமீறல்:1,131 வழக்குகள் பதிவு
/
போக்குவரத்து விதிமீறல்:1,131 வழக்குகள் பதிவு
ADDED : நவ 03, 2025 01:54 AM
ஈரோடு:ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார் கடந்த மாதம் பல்வேறு பகுதிகளில், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
இதில் மொபைல் போன் பேசியபடி வாகனம் இயக்கியதாக, 29 வழக்கு, குடிபோதை வாகன இயக்கம் தொடர்பாக, 50, ஹெல்மெட் இன்றி வாகனம் ஓட்டியதாக, 628 வழக்கு, காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக, 16, டூவீலரில் மூவர் சென்றதாக, 38 வழக்குகள் என, 1,131 விதிமீறல் வழக்குகள் பதிவு செய்து, 4.09 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
மப்பு வழக்கு 1,005
அதேசமயம் தெற்கு போக்குவரத்து போலீசார், நடப்பாண்டில் அக்டோபர் மாத இறுதி வரை குடிபோதையில் வாகனம் இயக்கியதாக, 1,005 வாகன ஓட்டிகள் மீது பதிவு செய்துள்ளனர். இதில், 856 பேர் டூவீலர்களில் வந்தவர்கள். போதை வாகன இயக்கம் நிரூபிக்கப்பட்ட நிலையில், 396 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

