/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெண்ணை தற்கொலைக்கு துாண்டியவர் மீது வழக்கு
/
பெண்ணை தற்கொலைக்கு துாண்டியவர் மீது வழக்கு
ADDED : நவ 03, 2025 01:55 AM
ஈரோடு;பெருந்துறை, காஞ்சிகோவில்-நசியனுார் சாலை, முள்ளம்பட்டி அலமேடு பூபதி ராஜா மனைவி பூமணி, 27; காஞ்சிகோவில் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
கந்தம்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. ஊர்மக்கள் இவரிடம் பணம் வாங்குவது, கொடுப்பது வழக்கம். நானும் எனக்கு தெரிந்த பெண்கள் ஆறு பேருக்கு, ௨.௯௧ லட்சம் ரூபாய் வாங்கி கொடுத்தேன். இரு மாதங்களுக்கு முன் பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கி வீட்டில் இருந்தேன். அவருக்கு பணத்தை கொடுக்க முடியவில்லை. இந்நிலையில் பணம் கேட்டு தகாத வார்த்தை பேசி, ஜாதி பெயரை குறிப்பிட்டு அநாகரிகமாக, தற்கொலைக்கு துாண்டும் விதமாக பேசினார். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார்.
விசாரித்த போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட மூன்று பிரிவுகளில், சுந்தரமூர்த்தி மீது வழக்குப்பதிவு
செய்துள்ளனர்.

