/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போக்குவரத்து விதிமீறல்; 1,627 பேர் மீது வழக்கு பதிவு
/
போக்குவரத்து விதிமீறல்; 1,627 பேர் மீது வழக்கு பதிவு
போக்குவரத்து விதிமீறல்; 1,627 பேர் மீது வழக்கு பதிவு
போக்குவரத்து விதிமீறல்; 1,627 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : ஆக 10, 2025 12:59 AM
ஈரோடு, ஈரோடு மாநகரில், போக்குவரத்து விதிகளை மீறியதாக ஜூலையில், 1,627 வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரூ.3.37 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.
ஈரோட்டில், நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. சில வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறி, வாகனங்களை இயக்கி வருவதால் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. விதிகளை மீறி வாகனங்களை இயக்கு வோர் மீது, நடவடிக்கை எடுக்க ஈரோடு எஸ்.பி., சுஜாதா உத்தரவிட்டார்.
அதன்படி, ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார், கடந்த மாதம் அரசு மருத்துவமனை ரவுண்டானா, ப.செ.பூங்கா சந்திப்பு, காளைமாட்டு சிலை, கலெக்டர் அலுவலகம், மூலப்பாளையம் சந்திப்பு, கொல்லம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாகன தணிக்கையில்
ஈடுபட்டனர்.
மதுபோதையில் வாகனம் இயக்கியதாக, 101 வழக்கு, டூவீலரில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக, 807, ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் இயக்கியதாக, 201, அதிவேகமாக வாகனம் இயக்கியதாக, 17, மொபைல்போன் பேசியபடி வாகனத்தை இயக்கியது, 44, சீட் பெல்ட் அணியாமல் நான்கு சக்கர வாகனம் இயக்கியதாக, 8, வாகன காப்பீடு இல்லாதது, 137 மற்றும் இதர வழக்கு கள் என மொத்தம், 1,627 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வாகன உரிமையாளர்களுக்கு, 3 லட்சத்து, 37 ஆயிரத்து, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.