/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அம்மாபேட்டை அருகே மனைவி இறந்த துக்கத்தில் கணவரும் உயிரிழந்த சோகம்
/
அம்மாபேட்டை அருகே மனைவி இறந்த துக்கத்தில் கணவரும் உயிரிழந்த சோகம்
அம்மாபேட்டை அருகே மனைவி இறந்த துக்கத்தில் கணவரும் உயிரிழந்த சோகம்
அம்மாபேட்டை அருகே மனைவி இறந்த துக்கத்தில் கணவரும் உயிரிழந்த சோகம்
ADDED : மே 22, 2025 02:15 AM
பவானி, அம்மாபேட்டை அருகே, மனைவி இறந்த துக்கத்தில், கணவரும் இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே ஆனந்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அம்மாசை, 85. இவரது மனைவி தாண்டாயி, 80. வயதான தம்பதியர்களுக்கு, இரு மகன்கள், இரு மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி, தனித்தனியே வசித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக மூதாட்டி தாண்டாயி, வயது மூப்பின் காரணமாக படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த, 19 அதிகாலை நேரத்தில் தாண்டாயி உயிரிழந்துள்ளார். இறுதிச்
சடங்கு முடிந்து, மனைவியை நேற்று முன்தினம் நல்லடக்கம் செய்து விட்டு வந்த அம்மாசை மன வருத்தத்தில் இருந்துள்ளார். இதற்கிடையில், நேற்று முன்தினம் இரவு துாங்கிய அம்மாசை, நேற்று அதிகாலை நேரத்தில் அவரும் துாக்கத்திலேயே இறந்தார். உறவினர்கள் வந்து பார்த்த பிறகுதான், அம்மாசை இறந்தது தெரிவந்துள்ளது.
மனைவி இறந்த இரண்டாவது நாளிலேயே, கணவரும் இறந்தது அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.