ADDED : ஏப் 07, 2025 02:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: இருகூரில் பழுதடைந்த தங்கும் அறையில் தங்க மாட்டோம். இருகூரில் உள்ள ரயில் டிரைவர்கள் தங்கும் அறையை மூட வேண்டும். கூட்ஸ் ரயில் ஓட்டும் டிரைவர்களை கோவை டிப்-போவில் உடனடியாக பணியமர்த்த வேண்டும்.
கோவையில் கூட்ஸ் டிப்போ திறக்க வேண்டும் என்பது உள்-ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, அகில இந்திய லோகோ (ரயில் இன்ஜின்) ஓட்டும் தொழிலாளர் சங்கம் சார்பில் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈரோடு கிளை செயலாளர் ப்ரோஸ் ரகுமான் தலைமை வகித்தார். மண்டல துணை செயலாளர் சிவக்-குமார் முன்னிலை வகித்தார். ரயில் டிரைவர், துணை டிரைவர்கள் பங்கேற்றனர்.

