ADDED : டிச 03, 2025 07:44 AM
ஈரோடு:அகில
இந்திய லோகோ ஓடும் தொழிலாளர் சங்கம், தென் மண்டலத்தின் சார்பில் நாடு
தழுவிய, 48 மணி நேர உண்ணாவிரத போராட்டம், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன்
வளாகத்தில் நேற்று தொடங்கியது.
சங்க கோட்ட பொருளாளர் ரித்திஸ் தலைமை
வகித்தார். சேலம் கோட்ட செயலாளர் அருண்குமார் முன்னிலை வகித்தார். துணை
செயலாளர் ரியாஸ் வரவேற்றார். தென் மண்டல ஒருங்கிணைப்பு செயலாளர்
சிவகுமார், கோவை கிளை செயலாளர் அப்துல் ஹக்கீம் சிறப்புரையாற்றினர்.
லோகோ ஓடும் தொழிலாளர்களுக்கு கிலோ மீட்டர் அலவன்சை, 25 சதவீதம்
உயர்த்தி, அதற்கான வருமான வரி பிடித்தத்திலிருந்து விலக்கு அளிக்க
வேண்டும். 30 மணி நேர வாராந்திர ஓய்வுக்கு மேலாக, 16 மணி நேரம் தலைமையக
ஓய்வு வழங்க வேண்டும். அசிஸ்டன்ட் லோகோ பைலட் நியமனத்தை விரைவு படுத்த
வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

