ADDED : ஜூலை 16, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும். பணி நேரத்தில் மட்டுமே பணி செய்ய அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி,
அகில இந்திய ஓடும் லோகோ தொழிலாளர் சங்கம் சார்பில், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க கிளை செயலாளர் பிரோஸ் ரஹ்மான் தலைமை வகித்தார். பிராந்திய செயலாளர் சிவக்குமார், கிளை பொருளாளர் அயூப் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.