ADDED : ஆக 30, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் முன், சேலம் கோட்ட ரயில் ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோட்ட செயலர் அருண்குமார் வரவேற்றார். தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் சங்க துணை பொதுச் செயலாளர் பிஜூ தலைமை வகித்தார். நிர்வாகிகள் வர்க்கீஸ், முருகேசன், சிவகுமார் உட்பட பலர் பேசினர்.
மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு, வார ஓய்வு, இரவு ஓய்வு போன்ற அடிப்படை காரணங்களுக்காக பெரிய தண்டனை வழங்கும், சேலம் கோட்ட முதுநிலை பொறியாளரை கண்டிப்பது. விடுப்பு பணியிட மாறுதலை ஏற்க மறுத்து கால தாமதம் செய்வதை கண்டித்தல். விடுப்பு, ஓய்வை மறுத்து கண்காணிப்பு கேமரா மூலம் சிறு, சிறு காரணங்களுக்காக தண்டனை வழங்குவதை தவிர்க்க வேண்டும். 33,000 ரயில் ஓட்டுனர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, வலியுறுத்தினர்.