ADDED : மார் 28, 2026 05:10 AM

அ நிறம் | அளவு
ஈரோடு; அகில இந்திய ரயில் டிரைவர்கள் சங்கம் சார்பில், இரவுப்பணியை குறைக்க வலியுறுத்தி, டில்லியில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, ஈரோட்டில் நேற்று காலை போராட்டம் நடந்தது. உதவி கோட்ட செயலாளர் ஜெபாஸ்டின் தலைமை வகித்தார். ஈரோடு கிளை செயலாளர் பிரோஸ் ரகுமான் முன்னிலை வகித்தார். கிளை பொருளாளர் அயூப் நன்றி கூறினார்.
கிலோ மீட்டர் அவலன்சில், 70 சதவீதம் வரு-மான வரி விலக்கு அளிக்க வேண்டும். 25 சத-வீதம் உயர்த்த வேண்டும். 16 மணி நேரம் பணி ஓய்வு மற்றும் 30 மணி நேரம் வார ஓய்வு அளிக்க வேண்டும். இரவுப்பணியை இரண்டாக குறைக்க வேண்டும். பணி நேரத்தை, 9 மணி நேரமாக குறைக்க வேண்டும். வெளியூரில் தங்கும் நேரத்தை, 36 மணி நேரமாக நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
