மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆசிரியர், அலுவலர்களுக்கு பயிற்சி
மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆசிரியர், அலுவலர்களுக்கு பயிற்சி
ADDED : ஜூலை 09, 2026 04:58 AM

ஈரோடு:ஈரோடு மாநகராட்சி பகுதியில்
மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் மற்றும்
அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் கடந்த, 6ம் தேதி துவங்கியது.
இதன்படி
நேற்று நடந்த மூன்றாவது நாள் பயிற்சி கூட்டத்தின் போது, சென்சஸ் எண்,
குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை, குடும்ப தலைவர், தலைவி பெயர் என
கணக்கெடுப்பின் போது கேட்க வேண்டிய, 33 கேள்விகள் குறித்து விளக்கம்
அளிக்கம் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
மாநகராட்சியில், 11வது மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027ல், நடத்த
திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணியில் அரசு பள்ளி ஆசிரியர்கள்,
மாநகராட்சி அலுவலர்கள் என மொத்தம், 1,089 பேர் ஈடுபட உள்ளனர்.
இவர்களுக்கான பயிற்சி வகுப்பு துவங்கி வரும், 15ம் தேதி வரை
நடைபெறுகிறது.
வாசவி கல்லுாரி, காமராஜர் பள்ளியில் உள்ள இளைஞர்
மேம்பாட்டு மையம், டீச்சர்ஸ் காலனியில் உள்ள மாநகராட்சி
நடுநிலைப்பள்ளி, கொல்லம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆகிய
நான்கு இடங்களில் நடைபெற்று வருகிறது. வரும் 17ம் தேதி முதல், 31ம்
தேதி வரை சுய கணக்கெடுப்பு பணிகளும், ஆக.,1 முதல் 30 வரை வீடு
பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணிகளும் நடைபெற
உள்ளது. இவ்வாறு கூறினர்.
