/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தீயணைப்பு - மீட்பு பணி செக்யூரிட்டிகளுக்கு பயிற்சி
/
தீயணைப்பு - மீட்பு பணி செக்யூரிட்டிகளுக்கு பயிற்சி
தீயணைப்பு - மீட்பு பணி செக்யூரிட்டிகளுக்கு பயிற்சி
தீயணைப்பு - மீட்பு பணி செக்யூரிட்டிகளுக்கு பயிற்சி
ADDED : பிப் 10, 2026 08:44 AM
ஈரோடு: தீத்தடுப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து, தனியார் செக்யூரிட்டிகள், தனியார் கல்லுாரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு, செயல் விளக்கம் ஈரோடு தீயணைப்பு நிலையத்தில் நேற்று அளிக்கப்பட்டது.
தீயணைப்பு கருவிகளை கொண்டு தீயை முழுமையாக அணைப்பது, அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டால் மீட்பு பணியில் ஈடுபடுவது உள்ளிட்ட அனைத்து அடிப்படை பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. பெருந்துறை, பவானி, மொடக்குறிச்சி, அந்தியூர், நம்பியூர், கோபி, சத்தி, கொடுமுடி, சென்னிமலை தீயணைப்பு நிலையங்களிலும், இதேபோல் பயிற்சி மற்றும் மீட்பு தொடர்பான அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டது. ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் செந்தில்குமார் தலைமை வகித்தார். உதவி மாவட்ட அலுவலர்கள் கணேசன், கலைச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.