ADDED : ஜூலை 27, 2024 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: பொருளியல், புள்ளியியல் துறை சார்பில், 11வது வேளாண்மை கணக்கெடுப்பின், 2ம் கட்ட பணிக்கான பயிற்சி வகுப்பு, வி.ஏ.ஓ.,க்களுக்கு டி.ஆர்.ஓ., சாந்தகுமார் தலைமையில் ஈரோட்டில் நடந்தது.
நீர் பாய்ச்சப்பட்ட பயிர்களின் பரப்பளவு, நீர் பாய்ச்சப்படாத பயிர்களின் பரப்பளவு, எத்தனை போக சாகு-படி, விவசாயம் தவிர்த்த இதர பயன்பாட்டின் விபரம் சேகரிக்க வேண்டும். மின்னணு முறையில் முதல் கட்டப்பணி நடந்த நிலையில், 2ம் கட்ட பணியும் அதே முறையில் நடப்பதாக தெரி-விக்கப்பட்டது. புள்ளியியல் துணை இயக்குனர் இசக்கியப்பன், கோட்ட புள்ளியியல் உதவி இயக்குனர் லோகநாதன், கோபி உதவி இயக்குனர் சாந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

