/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சத்தி, அந்தியூர் யூனியன் ஆசிரியர்களுக்கு கோபியில் இட மாறுதல் கவுன்சிலிங்

ADDED : ஜூலை 03, 2025 01:19 AM
கோபி, கோபி டி.இ.ஓ., அலுவலகத்தில், இரு யூனியன் ஆசிரியர்களுக்கான, மலை சுழற்சி இடமாறுதல் கவுன்சிலிங் நேற்று நடந்தது.
சத்தியமங்கலம் மற்றும் அந்தியூர் யூனியன்களில், அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான, மலை சுழற்சி இடமாறுதல் கவுன்சிலிங், கோபி தொடக்கக்கல்வி அலுவலர் திருநாவுக்கரசு தலைமையில், கோபி அருகே கரட்டடிபாளையத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடந்தது. வட்டார கல்வி அலுவலர்கள் கோபால், தேவேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
அந்தியூர் யூனியனில், மலையிறக்கமாக, 31 ஆசிரியர்கள், மலையேற்றமாக, 12 ஆசிரியர்கள் என மொத்தம், 43 ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் நடந்தது.
சத்தியமங்கலம் யூனியனில், மலையிறக்கமாக, 40 ஆசிரியர்கள், மலையேற்றமாக, 13 ஆசிரியர்கள் என மொத்தம், 53 ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் நடந்தது.
இரு யூனியன்களிலும், 96 ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் நடந்தது. கவுன்சிலிங்கில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கான ஆணை, ஆன்லைன் மூலம் டவுன்லோடு செய்து வழங்கப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள்
தெரிவித்தனர்.