sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோடு மாவட்டத்தில் தாசில்தார்கள் இடமாற்றம்

/

ஈரோடு மாவட்டத்தில் தாசில்தார்கள் இடமாற்றம்

ஈரோடு மாவட்டத்தில் தாசில்தார்கள் இடமாற்றம்

ஈரோடு மாவட்டத்தில் தாசில்தார்கள் இடமாற்றம்


ADDED : பிப் 01, 2024 11:45 AM

Google News

ADDED : பிப் 01, 2024 11:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், 18 தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, ஈரோடு ஆர்.டி.ஓ.,வின் நேர்முக உதவியாளர் ஜி.முத்துகிருஷ்ணன் - ஈரோடு தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு தாசில்தார் ப.ஜெயகுமார் - ஈரோடு முத்திரைத்தாள் தனி தாசில்தாராகவும், ஈரோடு முத்திரைத்தாள் தனி தாசில்தார்

ஆர்.எஸ்.கதிர்வேல் - ஈரோடு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக பறக்கும் படை தனி தாசில்தாராகவும், பெருந்துறை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் என்.ஆர்.அமுதா - ஈரோடு ஆர்.டி.ஓ.,வின் நேர்முக உதவியாளராகவும், பவானி தலைமையிடத்து துணை தாசில்தார் எம்.ஜமுனாராணி பதவி உயர்வுடன் - பெருந்துறை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார்.

கோபி குடிமை பொருள் தனி தாசில்தார் எஸ்.கார்த்திக் - கோபி தாசில்தாராகவும், கோபி தாசில்தார் பி.உத்திரசாமி - கோபி குடிமை பொருள் தனி தாசில்தாராகவும், ஈரோடு டாஸ்மாக் கிடங்கு மேலாளர் கே.கவியரசு - அந்தியூர் தாசில்தாராகவும், அந்தியூர் தாசில்தார் ஜி.பெரியசாமி - கோபி ஆர்.டி.ஓ.,வின் நேர்முக உதவியாளராகவும், கோபி ஆர்.டி.ஓ.,வின் நேர்முக உதவியாளர் என்.வெங்கடேஸ்வரன் - தாளவாடி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், ஈரோடு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அ.பரிமளாதேவி - ஈரோடு டாஸ்மாக் கிடங்கு மேலாளராகவும், பவானி தேர்தல் பிரிவு துணை தாசில்தார் ஆர்.சரவணன் பதவி உயர்வுடன் - ஈரோடு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

நம்பியூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கே.துரைசாமி - சத்தியமங்கலம் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாராகவும், சத்தியமங்கலம் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் சி.சந்திரசேகர் - நம்பியூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், ஈரோடு கோட்ட கலால் அலுவலர் கு.குமரேசன் - பவானி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், பவானி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் வே.வீரலட்சுமி - ஈரோடு கோட்ட கலால் அலுவலராகவும், ஈரோடு ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் சி.கணேசன் - கோபி டாஸ்மாக் கிடங்கு மேலாளராகவும், கோபி டாஸ்மாக் கிடங்கு மேலாளர் எஸ்.ஜே.கணேசன் - ஈரோடு ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us