ADDED : அக் 24, 2026 06:12 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:'ஈரோடு
கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன்' தலைவர் பாலசுப்பிரமணியன்
தலைமையிலானோர், ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில், வழங்கிய
மனுவில் கூறியதாவது:
ஈரோடு கடைவீதி பகுதியில், குறிப்பாக ஜவுளி
நிறுவனங்களில் திருநங்கைகள் அத்துமீறி உள்ளே நுழைந்து இனாம்
கேட்கின்றனர். முன்பு ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் இனாம் கேட்டு
வந்தனர். தற்போது அடிக்கடி வந்து தொந்தரவு செய்கின்றனர். அவர்கள்
கேட்கும் பணத்தை தருமாறு வற்புறுத்துகின்றனர். இதனால்
வணிகர்களுக்கு விற்பனை நேரத்தில் தவிர்க்க முடியாத சிரமம், தேவையற்ற
பிரச்னை ஏற்படுகிறது. போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்து
தீர்வு காண வேண்டும். இவ்வாறு கூறினர்.
