ADDED : நவ 14, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, சித்தோடு அருகே சந்தைக்கடை மேடு பகுதியில், கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்படி சித்தோடு போலீசார் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்துக்கு இடமாக நின்ற திருநங்கை குந்தவையிடம், 23, கஞ்சா பொட்டலம் இருந்தது. அவர் வீட்டில் சோதனை செய்ததில், குப்பையில் பதுக்கி வைத்திருந்த, 1,700 கிராம் கஞ்சா சிக்கியது. பவானியை சேர்ந்த அசோக், சஞ்சய் ஆகியோரிடம் கஞ்சா வாங்கி வந்து, பொட்டமாக்கி விற்பதாக தெரிவித்தார். அவரை கைது செய்து, அசோக் மற்றும் சஞ்சயை தேடி வருகின்றனர்.

