/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போக்குவரத்து ஊழியர் ஆண்டு பேரவை கூட்டம்
/
போக்குவரத்து ஊழியர் ஆண்டு பேரவை கூட்டம்
ADDED : ஜூலை 30, 2025 01:20 AM
ஈரோடு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க ஆண்டு பேரவை கூட்டம் ஈரோட்டில் நடந்தது. துணை பொது செயலர் இளங்கோவன் கொடியேற்றினார்.
உதவி செயலர் கருப்புசாமி அஞ்சலி தீர்மானம் படித்தார். மண்டல தலைவர் மாரப்பன் தலைமை வகித்தார். உதவி செயலர் ஜி.ரவி வரவேற்றார். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலர் ஸ்ரீராம் துவக்கி வைத்தார்.
அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய, 3,500 கோடி ரூபாயை உடன் வழங்க வேண்டும். பிற துறைகளை போல, அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கும் அடிப்படை ஓய்வூதியத்தை முறைப்படுத்த வேண்டும். அரசு போக்குவரத்து கழகங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மரணமடைந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய மண்டல தலைவராக இளங்கோவன், பொது செயலர் ஜான்சன் கென்னடி, பொருளாளர் அய்யாசாமி, துணை பொது செயலர் பாலகிருஷ்ணன், தேவராஜ் உட்பட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.