தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ந்து 3ம் நாளாக காத்திருப்பு போராட்டம்

போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ந்து 3ம் நாளாக காத்திருப்பு போராட்டம்

போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ந்து 3ம் நாளாக காத்திருப்பு போராட்டம்


ADDED : ஆக 21, 2025 02:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2025 02:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, ஈரோடு, சென்னிமலை சாலை, அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன், அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் - சி.ஐ.டி.யு., சார்பில், நேற்று 3வது நாளாக காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.

மண்டல நிர்வாகி ஜெகநாதன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் இளங்கோ, முருகையா, ஜான்சன் கென்னடி, ஸ்ரீதர் ஆகியோர் பேசினர்.

கடந்த, 2021 சட்டசபை தேர்தலில் தி.மு.க., அறிவித்த, அரசு போக்குவரத்து கழகம் மற்றும் ஊழியர்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். 2003 ஏப்., 1க்கு பின் பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை அமலாக்குங்கள். 24 மாதம் நிலுவையில் உள்ள ஓய்வு கால பண பலன்களை உடன் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு, பணியில் உள்ள ஊழியர்கள் பெறும் அக

விலைப்படியை வழங்க வேண்டும். ஒப்பந்த பலன்களை வழங்கி, ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும். குறைந்த பட்ச ஓய்வூதியத்தை, 7 வது ஊதியக்குழு அடிப்படையிலும், 15 வது ஊதிய ஒப்பந்த அரியர்ஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us