/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை கோரி போக்குவரத்து ஊழியர் வாயிற்கூட்டம்
/
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை கோரி போக்குவரத்து ஊழியர் வாயிற்கூட்டம்
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை கோரி போக்குவரத்து ஊழியர் வாயிற்கூட்டம்
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை கோரி போக்குவரத்து ஊழியர் வாயிற்கூட்டம்
ADDED : ஜன 05, 2024 10:56 AM
ஈரோடு: ஊதிய ஒப்பந்த உயர்வு பேச்சுவார்த்தை நடத்தக்கோரி, ஈரோட்டில் சென்னிமலை சாலையில் உள்ள, அரசு போக்குவரத்து கழக பணிமனை முன், அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் - சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., - டி.டி.எஸ்.எப்., உள்ளிட்டவற்றின் கூட்டமைப்பு சார்பில் நேற்று வாயிற்கூட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு., ஈ-1 கிளை சங்க செயலாளர் ரவி தலைமை வகித்தார்.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை அமலாக்க வேண்டும். ஒரு லிட்டருக்கு, 6.5 கி.மீ., துாரம் இயக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தை கைவிட வேண்டும் ஊழியர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடன் துவங்க வேண்டும் என்பது உட்பட, 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தினர்.
இதேபோல் நம்பியூரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் அனைத்து தொழிற்சங்க ஓய்வுபெற்ற நலச்சங்க கூட்டமைப்பு சார்பில், வேலை நிறுத்த விளக்க ஆயத்த கூட்டம், நம்பியூர் போக்குவரத்து பணிமனை எதிரில் நேற்று நடந்தது.