ADDED : ஜூன் 26, 2026 01:56 AM
அ நிறம் | அளவு
பவானி; ஆப்பக்கூடலில் இருந்து பவானி செல்லும் சாலையில், இருபுறங்களிலும் மரங்கள் உள்ளன. இந்நிலையில் ஒரிச்சேரிப்புதுாரில், 15 அடி உயரம் கொண்ட ஒரு வேப்பமரம் நேற்று மாலை திடீரென முறிந்தது.
மரத்தின் கிளை பகுதி அவ்வழியாக சென்ற உயர் மின்னழுத்த மின்கம்பி மீது விழுந்ததில், கம்-பிகள் ஒன்றோரு ஒன்று உரசி மின் தடை ஏற்பட்-டது. அப்போது அந்த இடத்தில் யாரும் இல்லா-ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. நெடுஞ்சாலை மற்றும் மின்வாரிய துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மின் கம்பி மீது விழுந்த மரத்தை வெட்டி அகற்றினர். சாலையில் மரம் கிடந்ததால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின் கம்பிகள் சீரமைக்கப்பட்ட நிலையில், இரவு, 7:00 மணிக்கு மின் வினி-யோகம் கிடைத்தது.
