/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நம்பியூர் காமராஜ் பள்ளி நிறுவனர் நினைவு தினத்தில் மரம் நடும் விழா
/
நம்பியூர் காமராஜ் பள்ளி நிறுவனர் நினைவு தினத்தில் மரம் நடும் விழா
நம்பியூர் காமராஜ் பள்ளி நிறுவனர் நினைவு தினத்தில் மரம் நடும் விழா
நம்பியூர் காமராஜ் பள்ளி நிறுவனர் நினைவு தினத்தில் மரம் நடும் விழா
ADDED : செப் 23, 2024 04:08 AM
நம்பியூர்: -நம்பியூர் காமராஜ் பள்ளி நிறுவனரும், மூத்த வழக்கறிஞருமான என்.கே.கருப்புசாமியின், இரண்டாமாண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. நம்பியூர் பஸ் ஸ்டாண்ட் முன் நடந்த நிகழ்ச்சிக்கு, நம்பியூர் தெற்கு வட்டார காங்., தலைவர் ஜவகர் தலைமை வகித்தார். கருப்புசாமி உருவப்படத்துக்கு அனைத்து கட்சியினரும் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
நம்பியூர் சமுதாய நலக்கூடம், கணேசபுரம் பூங்கா, காமராஜ் பள்ளி வளாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், நுாற்ற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்று நடப்பட்டது.நிகழ்ச்சியில் நம்பியூர் காங்., வடக்கு வட்டார தலைவர் சண்முகசுந்தரம், கோபி மாவட்ட தி.க., தலைவர் சென்னியப்பன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட தலைவர் பொன்னுச்சாமி, நம்பியூர் பேரூராட்சி துணைத் தலைவர் தீபா, வார்டு உறுப்பினர் ரேவதி, ஒன்றிய குழு உறுப்பினர் லோகசம்பத், மாநில பொதுக்குழு உறுப்பினர் மனோகரன் உள்ளிட்ட காங்., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.