நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், திருப்பூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்டம் சார்பில் சாலையோரம், 16 ஆயிரம் மரக்கன்று நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக காங்கேயம் கோட்ட பகுதியில், 1,500 மரக்கன்று நடப்படுகிறது.
இதன்படி மாவட்ட இதர சாலையான சிவன்மலை- வேலாயுதம்பாளையம், கீரனுார்-வேலாயுதம்பாளையம் சாலை ஓரங்களில், 450 மரக்கன்று நடப்பட்டுள்ளது. மற்ற சாலைகளில் வரும் நாட்களில் மீதி மரக்கன்று நடும் பணி நடக்கும் என்று, காங்கேயம் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் வடிவேல் குமரன் மற்றும் உதவி பொறியாளர் ரஞ்சித் தெரிவித்தனர்.

