ADDED : செப் 03, 2025 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு டீசல் ஷெட் முன், தஷின் ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் (டி.ஆர்.இ.யு.,) சார்பில், நேற்று மதியம் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை செயலாளர் சந்தோஷ் தலைமை வகித்தார். பெண்கள் உள்ளிட்ட, 50 பேர் பங்கேற்றனர்.
கடந்த நிதியாண்டில் பயணிகள் ரயில், சரக்கு ரயில் மூலம் ரயில்வே வருவாய் அதிகரித்து இருப்பதாக கணக்கு காட்டியுள்ளனர்.ஆனால் ரயில்வே தொழிலாளர்களுக்கு அதே, 78 நாள் போனஸே வழங்கப்படுகிறது. சில ஆண்டாக போனஸ் பெற சம்பள உச்ச வரம்பை நிர்ணயித்துள்ளனர். இந்நிலையை தவிர்த்து வருவாய்க்கு ஏற்ற வகையில் போனஸ் நாட்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.