ADDED : நவ 14, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, தெற்கு ரயில்வே முழுவதும் டி.ஆர்.இ.யு., (தட்சின் ரயில்வே எம்ளாயிஸ் யூனியன்) சார்பில், பெரும்திரள் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதன்படி ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
எட்டாவது ஊதியக்குழு இடைக்கால நிவாரணமாக, அடிப்படை சம்பளம் மற்றும் அடிப்படை பென்சனில், 30 சதம், 2026 ஜனவரி முதல் வழங்க வேண்டும். ஊதிய குழுவில் பென்ஷன் உயர்வு மறுக்கும் நிதி சட்டம்-2025ஐ ரத்து செய்ய வலியுறுத்தி, யூனியன் கூடுதல் கோட்ட செயலாளர் ரங்கநாயகி தலைமையில், 30 பேர் ஆர்ப்பாட்டம்
செய்தனர்.

