/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆசனுாரில் பழங்குடியின போராளி பிர்சா முண்டா பிறந்தநாள் விழா
/
ஆசனுாரில் பழங்குடியின போராளி பிர்சா முண்டா பிறந்தநாள் விழா
ஆசனுாரில் பழங்குடியின போராளி பிர்சா முண்டா பிறந்தநாள் விழா
ஆசனுாரில் பழங்குடியின போராளி பிர்சா முண்டா பிறந்தநாள் விழா
ADDED : நவ 20, 2025 02:24 AM
ஈரோடு, நவ. 20
ஆசனுாரில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில், ரீடு நிறுவனம் சார்பில் பழங்குடியினரின் உரிமை போராளி பிர்சா முண்டாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
ரீடு நிறுவன திட்ட மேலாளர் பழனிச்சாமி வரவேற்றார். விழா நோக்கம் குறித்து, ரீடு நிறுவன இயக்குனர் கருப்புசாமி பேசினார். சிறப்பாளராக, சத்தியமங்கலம் புலிகள் காப்பக இணை இயக்குனர் யோகேஷ் குமார் கார்க் பங்கேற்றார்.
இந்தாண்டின் விருதுகளில் மாவள்ளம் கிராமம் சிறந்த கிராம வளர்ச்சிக்குழு விருது, காளிதிம்பம் கிராமம் சிறந்த குழந்தைகள் பாராளுமன்ற விருது, சோக்கிதொட்டி மற்றும் தடசலட்டி கிராமங்கள் சிறந்த வளர் இளம் பெண்கள் குழு விருது, தேவர்நத்தம் மற்றும் கெத்தேசால் கிராமங்கள் சிறந்த மகளிர் சுய உதவிக் குழு விருது, தடசலட்டி கிராமம் சிறந்த மளிகை கடை விருதை பெற்றன. விழாவில் சாரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கல்வி இயக்குனர் போஸ்கோ இறையன்பு, எழுத்தாளர் நித்யா இறையன்பு, பழங்குடி மக்கள் சங்க தலைவர் மோகன்குமார், கோட்டாடை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரவி, அரேப்பாளையம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சிவம்மா, விதைகள் வாசகர் வட்டம் பரமேஸ்வரன், ஈரோடு ரோட்டரி தலைவர் ராஜேந்திரன், அரேபாளையம் பிஓஐ மேலாளர் சச்சின் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை திட்ட மேலாளர் பழனிச்சாமி, ஆவண அலுவலர் பூந்தமிழன் மற்றும் திட்ட அலுவலர்கள் ஒருங்கிணைத்தனர்.

