ADDED : ஆக 09, 2026 05:08 AM
அ நிறம் | அளவு
அந்தியூர்:பர்கூர்மலையில்
உள்ள கொங்காடை அரசு உறைவிட நடுநிலைப்பள்ளியில், உலக
பழங்குடியினர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
பள்ளி
தலைமையாசிரியர் கோபாலன் வரவேற்றார். வனக்குழு தலைவர் பசுவன், சூழல்
மேம்பாட்டுக்குழு தலைவர் சடையன் முன்னிலை வகித்தனர். அந்தியூர்
ரேஞ்சர் நந்தினி, பழங்குடியினர் தினத்தின் முக்கியத்துவம்,
பழங்குடி மக்களின் பாரம்பரிய வாழ்க்கை முறை, இயற்கை வளங்களை முறையாக
பயன்படுத்துவது குறித்து விளக்கினார். இதையொட்டி பேச்சு, கட்டுரை,
ஓவியப்போட்டி நடத்தி, வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு
வழங்கப்பட்டது. நிகழ்வில் பாரஸ்டர் ராஜேஸ்குமார், வனக்காப்பாளர்கள்
கார்த்திக், தவராஜ், வனக்காவலர் பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
