/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தொழிலாளியை தாக்கிய பழங்குற்றவாளி கைது
/
தொழிலாளியை தாக்கிய பழங்குற்றவாளி கைது
ADDED : ஆக 19, 2025 02:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு, சூரம்பட்டி வலசு, அண்ணா வீதியை சேர்ந்தவர் கார்த்தி, 36, கூலி தொழிலாளி. அண்ணா வீதி பகுதியில் பைக்கில் சென்றபோது, அதே பகுதியை சேர்ந்த ரவி மகன் மணிகண்டன் (எ) டியூக் மணி, 25, லிப்ட் கேட்டுள்ளார்.
கார்த்தி மறுத்ததால் கத்தியால் அவரது வலது காதில் கீறியுள்ளார். இதில் காயமடைந்த கார்த்தி அளித்த புகாரின்படி சூரம்பட்டி போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். மணிகண்டன் மீது சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஏற்கனவே இரு வழக்கு உள்ளதாக தெரிவித்தனர்.