/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பர்கூர் வனத்துறை அதிகாரிகளுக்கு பழங்குடி மக்கள் சங்கம் கண்டனம்
/
பர்கூர் வனத்துறை அதிகாரிகளுக்கு பழங்குடி மக்கள் சங்கம் கண்டனம்
பர்கூர் வனத்துறை அதிகாரிகளுக்கு பழங்குடி மக்கள் சங்கம் கண்டனம்
பர்கூர் வனத்துறை அதிகாரிகளுக்கு பழங்குடி மக்கள் சங்கம் கண்டனம்
ADDED : செப் 27, 2025 01:12 AM
சத்தியமங்கலம், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின், ஈரோடு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம், மாவட்ட சங்கத்தலைவர் கடம்பூர் ராமசாமி தலைமையில் சத்தியமங்கலத்தில் நேற்று நடந்தது.
பல தலைமுறைகளாக காப்புக்காடுகளை ஒட்டிய தரிசு நிலங்களில் பழங்குடிகளும், இதர மலைவாழ் மக்களும் விவசாயம் செய்து வாழ்கின்றனர். இந்நிலங்களை காடு ஓர புறம்போக்கு என, வருவாய் ஆவணங்களில் வகைப்படுத்தப்பட்டிருந்தது. தற்போது ஒதுக்கப்பட்ட வன நிலமாக மாற்றியுள்ளனர்.
இதனால் அவற்றில் விவசாயம் செய்து வரும் மக்களை வெளியேறுமாறு, வாய்மொழியாகவும், எழுத்து பூர்வமாகவும் பர்கூர் வனத்துறையினர் நிர்ப்பந்தித்து வருகின்றனர். இது தொடர்பாக எந்த அரசு உத்தரவும் இல்லாதபோது பர்கூர் வனத்துறை மக்களை மிரட்டியும்-விரட்டியும் வருவது நியாயமற்ற செயல்.
வன உரிமைச் சட்டப்படி வன-நில உரிமையை அங்கீகரிக்கும் பணியை தமிழ்நாடு பழங்குடியினர் நலத்துறை தற்போதுதான் துவங்கியுள்ளது. ஆனால் அரசின் மற்றொரு துறை அந்த நடவடிக்கைகளை முறியடிக்கும் வகையில் அமைந்துள்ளது.
பர்கூர் வனத்துறையின் சட்டவிரோத நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவும், கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். கூட்டத்தில் தாளவாடி, அந்தியூர், டி.என்.,பாளையம் பகுதிகளில் இருந்து கிராம சங்க நிர்வாகிகள், 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.