ADDED : ஆக 14, 2025 02:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் என்.என். பேட்டை வீதியை சேர்ந்தவர் கதிரேசன், 53. இந்து முன்னணி மாவட்ட செயலாளரான இவருக்கு நேற்று காலை, நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்றார்.
சில நிமிடங்களில் அவர் மாரடைப்பால் உயிரிழந்தார். மாலை, 5:00 மணியளவில் அங்கு வந்த இந்து முன்னணி மாநில தலைவர் சுப்பிரமணியம், கதிரேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில், இந்து முன்னணி, பா.ஜ., நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.