/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஜெயலலிதா நினைவு நாளில் திருவுருவ படத்திற்கு மரியாதை
/
ஜெயலலிதா நினைவு நாளில் திருவுருவ படத்திற்கு மரியாதை
ஜெயலலிதா நினைவு நாளில் திருவுருவ படத்திற்கு மரியாதை
ஜெயலலிதா நினைவு நாளில் திருவுருவ படத்திற்கு மரியாதை
ADDED : டிச 06, 2024 07:45 AM
பெருந்துறை: தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு, நேற்று பெருந்துறை வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், அவருடைய திருவுருவ படத்திற்கு கட்சியினர், மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
பெருந்துறை வடக்கு ஒன்றிய செயலாளர் தம்பி என்ற ரஞ்சித்ராஜ் தலைமை வகித்தார். ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு, பெருந்துறை அண்ணாதுரை சிலை அருகில், மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த, ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு, கட்சினர் மலர் மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செய்தனர்.
இதேபோல், கருமாண்டி செல்லிபாளையம், காஞ்சிக்கோவில், திருவாச்சி தேசிய நெடுஞ்சாலை அருகில், அண்ணா தொழிற்சங்க அலுவலகம் உட்பட பல்வேறு இடங்களில் ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், நகர செயலாளர்கள் கல்யாணசுந்தரம், பழனிச்சாமி, சிவசுப்பிரமணியம், மாவட்ட இளைஞரணி செயலாளர் அருணாசலம், பெருந்துறை யூனியன் சேர்மன் சாந்தி ஜெயராஜ், துணை சேர்மன் உமா மகேஸ்வரன், கருமாண்டிசெல்லிபாளையம் டவுன் பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.