/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தீவிரவாத தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி
/
தீவிரவாத தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி
ADDED : ஏப் 25, 2025 01:08 AM
ஈரோடு:
காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட, 26 பேருக்கு, ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், நேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதற்காக ஈரோடு மாநகர் ஹிந்து முன்னணி அமைப்பினர், மோட்ச தீபம் ஏற்றுவோம் என்ற வாசகம் அடங்கிய பேனரை, வீரப்பன்சத்திரம் பகுதியில் காலை, ௮:௦௦ மணிக்கு வைத்தனர். மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமையில் மோட்ச தீபம் ஏற்றினர். நிகழ்ச்சி முடிந்தவுடன் பேனரை அகற்றுமாறு வீரப்பன்சத்திரம் போலீசார் தெரிவித்தனர். ஆனால், ஹிந்து முன்னணியினர் மறுப்பு தெரிவிக்கவே, டவுன் டி.எஸ்.பி., முத்து
குமரனுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து டி.எஸ்.பி., முத்துகுமரன், வீரப்பன்சத்திரம் இன்ஸ்பெக்டர் செந்தில் பிரபு அங்கு சென்று, பேனரை உடனடியாக அகற்ற வற்புறுத்தினர்.
'சாலையோரத்தில்தான் அஞ்சலி பேனர் உள்ளது. மாலை வரை இருக்கட்டும். அதன் பின் அகற்றி கொள்கிறோம்' என்று ஹிந்து முன்னணியினர் தெரிவித்தனர். அந்த இடத்தில் பத்திரிக்கையாளர்கள் கேமராவுடன் நின்றதால், டி.எஸ்.பி., ஏதும் கூறாமல் சென்று விட, சிறிது நேரத்தில் ஹிந்து முன்னணியினரும் கிளம்பி சென்றனர். நண்பகல், 10:40 மணியளவில் சென்ற நிலையில், பேனர் அகற்றப்பட்டிருந்தது. வீரப்பன்சத்திரம் போலீசார், கூலி ஆட்கள் மூலம் பேனரை கழற்றி, அங்குள்ள மாரியம்மன் கோவில் சுவரில்
, வாசகம் தெரியாதவாறு திருப்பி வைத்து சென்றதாக, அப்பகுதியினர் தெரிவித்தனர்.* பவானி நகர பா.ஜ., சார்பில், தலைவர் பிரவீன்குமார் தலைமையில், அந்தியூர் பிரிவில் இறந்தவர்களின் புகைப்படங்களை வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
* பவானிசாகர் ஒன்றிய பா.ஜ., சார்பில், தலைவர் ஞானசேகர் தலைமையில், புன்செய்புளியம்பட்டி பஸ் ஸ்டாண்ட் முன் அஞ்சலி கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட தலைவர் செந்தில்குமார் செலுத்தி உரை நிகழ்த்தினார். ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
* டி.என்.பாளையம் ஒன்றிய பா.ஜ.,வினர், கிழக்கு மண்டல தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில், டி.என்.பாளையம் பஸ் நிறுத்தத்தில், இறந்தவர்களின் புகைப்படம் அடங்கிய பேனருக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

