ADDED : ஜூலை 07, 2026 05:31 AM

சென்னிமலை; சென்னிமலை அருகே அண்ணாமலைபாளை-யத்தில் செல்லும் முதலைமடை ஓடையின் குறுக்கே, தடுப்பணை கட்டும் பணி நடந்து வருகி-றது. இதில் தண்ணீரை தேக்கும்போது சரளைக்-காடு, சொக்கநாதபாளையம் இடையே உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கும் என்பதால், தரைப்பாலத்தை அகற்றிவிட்டு உயர்மட்ட பாலம் கட்டும் பணி தொடங்கி நடக்கிறது.
இதனால் இவ்வழியே செல்லும் அரசு டவுன் பஸ், பள்ளி வாகனங்கள் மற்றும் இருசக்கர வாக-னங்கள் உட்பட அனைத்தும், குண்டும், குழியு-மான மாற்றுப்பாதை வழியாக சென்றது. நாள-டைவில் அரசு டவுன் பஸ் நிறுத்தப்பட்டு விட்டது. பாலம் கட்டும் பணி, 90 சதவீதம் நிறைவடைந்து, சமன் செய்வதற்காக மண்ணை கொட்டினர்.ஆனால் நிரவி சமன்படுத்தாமல் அப்படியே விட்டு விட்டனர். கடந்த, 20 நாட்களுக்கு மேலா-கியும் பணி நடக்காததால், பாலத்தை கடந்து செல்ல முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
