ADDED : ஜூலை 06, 2026 04:24 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
அரசு மருத்துவமனையில் இருந்து, குமாரபாளையத்துக்கு நேற்று காலை
புறப்பட்ட அரசு டவுன் பஸ் மருத்துவமனை ரவுண்டானா பகுதியில் சென்றது.
பஸ்சில் பயணிகள் இல்லை. திடீரென டிரைவருக்கு மயக்கம் ஏற்பட்டதால்,
முன்னால் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் மீது மோதியது. விபத்தில் அரசு
பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. டிரைவர் அரசு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்த அழுத்தம் குறைவு
காரணமாக, டிரைவருக்கு மயக்கம் ஏற்பட்டது தெரியவந்தது.
