/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அணை பகுதியில் கழிவுகொட்டிய லாரி பறிமுதல்
/
அணை பகுதியில் கழிவுகொட்டிய லாரி பறிமுதல்
ADDED : மே 04, 2025 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்:காங்கேயம் அடுத்த தம்மரெட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட நொய்யல் ஒரத்துபாளையம் அணை அருகே, காங்கேயம், பரஞ்சேர்வழியை சேர்ந்த மயில்சாமி, 20, லாரியில் கழிவை கொண்டு வந்து நேற்று மாலை கொட்டியுள்ளார்.
நீர் பாதுகாப்பு மற்றும் வடிகால் வாரிய அதிகாரி பாலுசாமிக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். அங்கு சென்றவர் லாரி, டிரைவர் மயில்சாமியை பிடித்து, காங்கேயம் போலீசில் ஒப்படைத்தார். பல்லடம் நகராட்சியில் இருந்து கழிவை கொண்டு வந்து கொட்டியதாக தெரிகிறது. அவர் மீது காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

