ADDED : ஜூன் 26, 2025 02:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம், ஆசனுார் அருகே பள்ளத்தில் கவிழ்ந்த லாரி மீட்கப்பட்டது.
கர்நாடகா மாநிலம், சாம்ராஜ் நகரிலிருந்து நேற்று முன்தினம் இரவு, தேங்காய் லோடு ஏற்றிய லாரி பொள்ளாச்சி நோக்கி செல்வதற்காக, ஆசனுார் வழியாக சென்று கொண்டிருந்தது. லாரியை சாம்ராஜ் நகரை சேர்ந்த கோவிந்த் ஓட்டினார். கிளீனர் சந்தோஷ்குமார் உடனிருந்தார். லாரி ஆசனுார் - திம்பம் இடையே உள்ள, செம்மண் திட்டு பகுதியில் வரும் போது, கட்டுப்பாட்டை இழந்து, 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
டிரைவர், கிளீனர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். நேற்று மாலை சிதறிக்கிடந்த தேங்காய்களை மாற்று வாகனங்களில் ஏற்றிய பின், கிரேன் மூலம் லாரி மீட்கப்பட்டது. இதனால் ஆசனுார் சாலையில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மாலை 6:00 மணிக்கு மேல் வாகனங்கள் ஊர்ந்த படி சென்றன.