/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'ட்ரங்க் அண்ட் டிரைவ்' அதிகரிப்பு போக்குவரத்து போலீசார் கொதிப்பு
/
'ட்ரங்க் அண்ட் டிரைவ்' அதிகரிப்பு போக்குவரத்து போலீசார் கொதிப்பு
'ட்ரங்க் அண்ட் டிரைவ்' அதிகரிப்பு போக்குவரத்து போலீசார் கொதிப்பு
'ட்ரங்க் அண்ட் டிரைவ்' அதிகரிப்பு போக்குவரத்து போலீசார் கொதிப்பு
ADDED : பிப் 03, 2024 04:14 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், தற்போது சாலை பாதுகாப்பு வார விழா நடக்கிறது. இந்நிலையில் மாவட்டத்தில் நாளுக்கு நாள் சாலை விபத்து, உரியிழப்பு அதிகரித்தே வருகிறது.
மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாதது மட்டுமின்றி போலீசார், ஆர்.டி.ஓ.,க்கள் சரிவர சாலை விதிகளை வாகன ஓட்டிகள் பின்பற்றுகின்றனரா என்பதை கண்காணிக்க தவறுவதே காரணமென்று, போலீசாரே குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறியதாவது:
கடந்த, 2023ல் சாலை விதிமுறை மீறல் தொடர்பாக போலீசார், ஒரு லட்சத்து, 83 ஆயிரத்து, 989 வழக்குகள் பதிவு செய்தனர். அதாவது சராசரியாக தினமும், 500 வழக்கு பதிவாகியுள்ளது. ஓராண்டில் மட்டும் சாலை விதிமீறல் தொடர்பாக, 9,040 பேரின் டிரைவிங் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
அதாவது, 2022 விட, 2023ல் மதுபோதையில் வாகனம் இயக்கியதாக, 9,541 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசாரிடம் பிடிபடாமல் சென்றவர்கள் எண்ணிக்கையை சேர்த்தால் பிரமிப்பூட்டுவதாக அமையும்.
மதுபோதை வாகன இயக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், மது போதை வாகன இயக்கத்தை கண்டறிய ப்ரீதிங் அனலைசர் போதிய அளவில் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு வழங்கவில்லை. மதுபோதை வாகன ஓட்டிகளை அரசு டாக்டர்களிடம் பரிசோதனைக்காக அழைத்து செல்லும்போது, பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
மதுபோதை வாகன இயக்கமே சாலை விபத்துகளுக்கு பிரதான காரணமாக அமைகிறது. ஆனால், மதுபோதை வாகன இயக்கத்தை கட்டுப்படுத்த தேவையான உள்கட்டமைப்பு வசதி இல்லை.
சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதை விட சட்டங்கள் மூலம் அபராதம் விதித்தல், டிரைவிங் லைசன்ஸ் ரத்து செய்தல், வழக்குபதிவு செய்தல் போன்ற நடவடிக்கையால் மதுபோதை வாகன இயக்கத்தை குறைக்கலாம்.
இவ்வாறு போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

