/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காசநோய் ஒழிப்பு, புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்
/
காசநோய் ஒழிப்பு, புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்
காசநோய் ஒழிப்பு, புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்
காசநோய் ஒழிப்பு, புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்
ADDED : செப் 29, 2024 03:18 AM
ஈரோடு: பவானி வட்டாரம், ஆண்டிகுளம் பஞ்சாயத்து காடையாம்பட்டி பகுதியில், 100 நாள் வேலை உறுதித்திட்ட பணியாளர்களுக்காக காசநோய் ஒழிப்பு, புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
காசநோய் பரவும் விதம், நுரையீரல் காசநோய் அறிகுறி, இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை முறை, புகையிலை பயன்பாட்டின் தீமைகள், புகையிலையால் உயரும் மரண விகிதம், தடுப்பு சட்டங்கள், மீட்பு ஆலோசனை குறித்து விளக்கப்பட்டது.ஈரோடு மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், மாவட்ட சுகாதார அலுவலரின் நேர்முக உதவியாளர் மகேந்திரன், மாவட்ட புகையிலை தடுப்பு மைய சமூக சேவகர் சங்கீதா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமசாமி, செல்வம், ராமகிருஷ்ணன், ரவி உட்பட பலர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள், 65க்கும் மேற்பட்டோர், பொதுமக்கள் பங்கேற்றனர்.
காசநோய் ஒழிப்பு, புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு, புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர்.