/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காசநோய் இல்லா ஈரோடுவிழிப்புணர்வு முகாம்
/
காசநோய் இல்லா ஈரோடுவிழிப்புணர்வு முகாம்
ADDED : டிச 19, 2024 01:14 AM
ஈரோடு, டிச. 19-
மொடக்குறிச்சி யூனியன், லக்காபுரம் பஞ்., கரட்டாங்காடு துணை சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட, கொமாரபாளையம் ஆதிதிராவிடர் காலனியில், காசநோய் இல்லாத ஈரோடு விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நடந்தது.
காசநோய் பரவும் விதம், நோய் அறிகுறி, பாதிப்பு, பரிசோதனை, நுரையீரல் காசநோய் அறிகுறி, போன்றவை குறித்து விளக்கப்பட்டது. ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் (காசநோய்--மருத்துவ பணிகள்) ராமச்சந்திரன், உலக சுகாதார நிறுவன மண்டல ஆலோசகர் டாக்டர் ரீனு ஆகியோர் அப்பகுதியில் ஆய்வு செய்து, காசநோய் தாக்கம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் காசநோய்க்கான பரிசோதனை செய்வதன் காரணத்தை விளக்கினர். மக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். மாவட்ட நலக்கல்வி
யாளர் சிவகுமார், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மகேந்திரன், சுதன் சர்மா, காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் சிவகுமார், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவினர் பங்கேற்றனர். முகாமில் பங்கேற்றவர்களுக்கு மார்பக நுண்கதிர் பட பரிசோதனை, சளி பரிசோதனை செய்யப்பட்டது.

