ADDED : ஜூன் 04, 2026 04:54 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: சித்தோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், சனிக்கிழமை தோறும் காலை, 11:00 மணிக்கு மஞ்சள் ஏலம் நடக்கிறது.
விவசாயிகள், தங்கள் மஞ்சள் மூட்டைகளை கல், மண், துாசி, இதர பொருட்களை நீக்கி, செவ்வாய் முதல் வெள்ளிக்கிழமை
வரை இருப்பு வைத்து, சனி காலை, 11:00 மணிக்கு நடக்கும் ஏலத்தில்
பங்கேற்கலாம். இதற்கு, ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகநகலை
கொண்டு வந்து பதிவு செய்துகொள்ள வேண்டும். கூடுதல் விபரத்துக்கு,
7010566694 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, ஈரோடு விற்பனை
குழுவின் வேளாண் துணை இயக்குனர் மற்றும் செயலர் கலைச்செல்வி
கேட்டுக்கொண்டுள்ளார்.
