ADDED : ஜூன் 25, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமகிரிப்பேட்டை, நாமக்கல் மாவட்டத்தில், மஞ்சள் விற்பனையில் நாமகிரிப்பேட்டை முக்கிய இடத்தை வகிக்கிறது. தமிழகம் மட்டுமின்றி, இந்திய அளவில் உள்ள முக்கிய மஞ்சள் சந்தையில் நாமகிரிப்பேட்டையும் ஒன்று. இங்கு கூட்டுறவு அமைப்பான ஆர்.சி.எம்.எஸ்., மற்றும் 15க்கும் மேற்பட்ட தனியார் மண்டிகள் மூலம் வாரந்தோறும் செவ்வாய்கிழமை மஞ்சள் விற்பனை நடந்து வருகிறது.
நேற்று நடந்த ஏலத்தில் விரலி ரகம், 100 கிலோ மூட்டை குறைந்தபட்சம், 12,002 ரூபாய், அதிகபட்சம், 15,966 ரூபாய்; உருண்டை ரகம் குறைந்தபட்சம், 8,002 ரூபாய், அதிகபட்சம், 13,099 ரூபாய்; பனங்காலி, 25,899 ரூபாயிலிருந்து, 27,502 ரூபாய்க்கு விற்பனையானது. விரலி, 270, உருண்டை, 84, பனங்காலி, 6 என, 360 மூட்டை மஞ்சள், 27 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.