ADDED : ஜூன் 07, 2026 05:58 AM
அ நிறம் | அளவு
கோபி:கோபி
அருகே பழனிக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம், 42,
அளுக்குளியை சேர்ந்தவர் தேவானந்தன், 51; கூலி தொழிலாளிகளான
இருவரும் நேற்று முன்தினம் மதியம், பைக்கில் சென்றனர்.
அப்போது
அவர்களின் பைக்கை உரசுவது போல் ஒரு பைக்கில் வந்த இருவர்
பயணித்துள்ளனர். இதை தட்டிக்கேட்ட தேவானந்தனை, இருவரும்
தாக்கினர். அவர் புகாரின்படி விசாரித்த கடத்துார் போலீசார், கோபியை
சேர்ந்த நந்தகுமார், 21, கணேசன், 35, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
