ADDED : ஜூன் 07, 2026 05:59 AM
அ நிறம் | அளவு
பவானி:அம்மாபேட்டை
அருகேயுள்ள குருவ ரெட்டியூரை சேர்ந்தவர் கஸ்துாரி, 26; இவரின்
தங்கை நிர்மலா, 24; இவரின் கணவர் பெருமாள். தம்பதிக்கு மூன்று குழந்தை
உள்ளது.
மூன்று நாட்களுக்கு முன் குருவரெட்டியூர் பஸ் ஸ்டாண்டில்,
கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதையறிந்து சென்ற கஸ்துாரி,
தங்கை மற்றும் அவருடன் இருந்த இரண்டு வயது பெண் குழந்தையை
அழைத்துக்கொண்டு தனது வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம்
குழந்தையுடன் நிர்மலா மாயமாகி விட்டார். கஸ்துாரி புகாரின்படி
அம்மாபேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.
