ADDED : மே 20, 2024 01:55 AM
ஈரோடு: ஈரோடு, டீச்சர்ஸ் காலனி புத்தர் வீதியை சேர்ந்த திருநாவுக்கரசு மகன் நவீன்குமார், 29. திருப்பூரில் உள்ள மில்லில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம், பெரியசேமூரில் உள்ள அவரது நண்பரை பார்க்க மொபட்டில் சென்று கொண்டிருந்தார். பெரியசேமூர் மயானம் அருகே பைக்கை நிறுத்தி விட்டு, சிறுநீர் கழிக்க சென்றபோது அங்கு வந்த நான்கு பேர், நவீன்குமாரிடம் பணம் கேட்டு மிரட்டினர். நவீன்குமார் தர மறுத்ததால் அவர்கள் அடித்து உதைத்தனர்.
கீழே கிடந்த தென்ன மட்டையாலும் தலையில் தாக்கி விட்டு, நவீன்குமாரின் மொபட்டை திருடி சென்றனர். நவீன்குமாரை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி, நவீன்குமாரை தாக்கி மொபட் திருடியதாக வீரப்பன் சத்திரத்தை சேர்ந்த சந்திரக்குமார், 25. கார்த்தி, 24, ஆகிய இருவரை கைது செய்து மொபட்டை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

