/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஸ்டுடியோவில் கேமரா திருடிய இருவர் கைது
/
ஸ்டுடியோவில் கேமரா திருடிய இருவர் கைது
ADDED : செப் 23, 2024 04:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: வெள்ளகோவில், எல்.கே.சி.நகரை சேர்ந்த சோமசுந்தரம், வெள்ளகோவில் கடைவீதியில், 30 ஆண்டுகளாக போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார்.
கடையில் இரண்டு நாட்களுக்கு முன், இரண்டு கேமராக்கள் திருட்டு போனது. புகாரின்படி வெள்ளகோவில் போலீசார், திருடர்களை தேடி வந்தனர். கேமராக்களை திருடிய நாமக்கல், வெங்கசாலைமேடு தனுஸ்கரன், 22; சேலம், அம்மாபேட்டை முகமது யூனியஸ், 22, ஆகியோரை, நேற்று கைது செய்தனர். கேமராவை பறிமுதல் செய்த போலீசார், காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர். இருவர் மீதும் நாமக்கல், ஈரோடு, சேலம் மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களில், பல்வேறு குற்ற வழக்கு நிலுவையில் உள்ளன.