ADDED : டிச 10, 2024 02:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவிலில் திருடிய
இருவர் கைது
கோபி, டிச. 10-
கவுந்தப்பாடி அருகே சேவாக்கவுண்டனுாரில், சக்தி விநாயகர் கோவில் உள்ளது. கோவில் தர்மகர்த்தா பழனிச்சாமி, 54, நேற்று காலை கோவிலுக்கு சென்றார். கதவு மற்றும் உள்ளே இருந்த பீரோவை உடைத்து, வெண்கல மணி, பித்தளை சொம்பு, பித்தளை குத்துவிளக்கு, செம்பு மற்றும் பித்தளை குடம் திருட்டு போனது தெரிந்தது. அவர் புகாரின்படி கவுந்தப்பாடி போலீசார், களவாணிகளை தேடி வந்தனர். இது தொடர்பாக கோபியை சேர்ந்த சாமிநாதன், 60; பெரியபுலியூரை சேர்ந்த தனுஷ்குமார், 19, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த பூஜை பொருட்களை பறிமுதல் செய்தனர்.