/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
7 கி.மீ., துாரம் நடந்தபடி பம்பை வாசிப்பு பவானி அருகே இரு சிறுவர்கள் அசத்தல்

ADDED : நவ 14, 2025 01:16 AM
பவானி, நவ. 14
பவானி அருகே இரண்டு சிறுவர்கள், 7 கி.மீ., துாரம் நடந்தபடி, பம்பை வாசித்த நிகழ்வை, உலக சாதனையாக இரு அமைப்புகள் அங்கீகாரம் செய்துள்ளன.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே பாலக்காட்டூரை சேர்ந்தவர் கீர்த்திவாசன், 14; கவுந்தப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவன். கடந்த ஐந்து ஆண்டுகளாக பம்பை வாசித்து பயிற்சி பெற்று வருகிறார்.
இவரின் நண்பர் அதே பகுதியை சேர்ந்தவர் தனுஷ்குமார், 17; இவரும் ஏழு ஆண்டாக பம்பை வாசிப்பு பயிற்சி பெற்று வருகிறார்.
இருவரும் நேற்று காலை, 8:30 மணியளவில், கவுந்தப்பாடியில் உள்ள கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து பம்பை வாசித்தபடி எங்கும் நிற்காமல் தொடர்ந்து வாசித்தபடி, 7 கி.மீ., துாரமுள்ள பாலக்காட்டூர் லட்சுமி நரசிம்மர் கோவிலை, 10:00 மணிக்கு அடைந்தனர்.
இந்நிகழ்வை ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ரெக்கார்டர் இந்தியா அகடாமி என இரு அமைப்புகள், உலக சாதனை நிகழ்வாக பதிவு செய்துள்ளன. இந்த அமைப்புகள் வழங்கிய உலக சாதனை விருதை, பவானி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கருப்பணன் வழங்கினார்.
இரு சிறுவர்களுக்கும் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர். இரண்டு சிறுவர்களின் தந்தையும், மேள வாத்திய கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.