/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தவறான தொடர்பு, கடனால் இருவர் தற்கொலை
/
தவறான தொடர்பு, கடனால் இருவர் தற்கொலை
ADDED : ஏப் 20, 2025 01:21 AM
ஈரோடு:ஈரோடு, எலவமலை, செங்கல்பாறை, செங்கோடன் மகன் சேகர், 30, கூலி தொழிலாளி. காதல் திருமணம் செய்தவர். மனைவி பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு சென்ற நிலையில், வேறு பெண்ணுடன் சேகருக்கு தொடர்பு ஏற்பட்டது.
தாய் கண்டித்தும் அப்பெண்ணுடன் சேகர் இருந்தார். சில தினங்களுக்கு முன் அப்பெண்ணும் சேகரை விட்டு சென்றார். இதில் மன வேதனையில் இருந்த சேகர், வீட்டில் துாக்கிட்டு கொண்டார். அக்கம்பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
* ஈரோடு, வில்லரசம்பட்டி, கைகாட்டி வலசு, பாரதியார் நகரை சேர்ந்தவர் செந்தமிழ் செல்வன், 34; ஐ.டி., கம்பெனி ஊழியர். வீட்டில் இருந்தே பணி செய்தார். கடன் வாங்கி ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ததில் நஷ்டம் ஏற்பட்டது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டதால், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இரு வழக்குகள் குறித்தும், வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.