/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் இரண்டு நாட்கள் வீட்டுமனை, வீடு விற்பனை கண்காட்சி
/
ஈரோட்டில் இரண்டு நாட்கள் வீட்டுமனை, வீடு விற்பனை கண்காட்சி
ஈரோட்டில் இரண்டு நாட்கள் வீட்டுமனை, வீடு விற்பனை கண்காட்சி
ஈரோட்டில் இரண்டு நாட்கள் வீட்டுமனை, வீடு விற்பனை கண்காட்சி
ADDED : ஆக 22, 2024 03:43 AM
ஈரோடு: இந்தியாவில் உள்ள முன்னணி குடியிருப்பு கட்டுமான நிறுவனங்கள், உலகத்தரத்துடன் வீட்டுமனைகள் மேம்பாடு செய்யும் நிறுவனங்கள் இணைந்து, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் சங்க கூட்டமைப்பு, அதாவது கிரெடாய் என்ற அமைப்பினை செயல்படுத்தி வருகின்றன. இந்த அமைப்பு சார்பில் வீட்டுமனை விற்பனை கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, ஈரோட்டில் திண்டல் டர்மரிக் ஓட்டலில் வரும் 24, 25 ஆகிய இரு நாட்கள் கண்காட்சி நடக்கிறது. இதற்கான ஆலோசனை கூட்டம், பெரியார் நகரில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது. மாநில பொருளாளர் சதாசிவம் தலைமை வகித்து கூறியதாவது:- கிரெடாய் அமைப்பு சார்பில் முதல் முறையாக ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்கள் உள்ளடக்கிய கிரெடாய் உறுப்பினர்கள் மிகப்பெரிய அளவிலான வீடு, வீட்டுமனை விற்பனை கண்காட்சியை நடத்துகின்றனர். இதன் தொடக்க விழா டர்மரிக் ஓட்டலில் வரும் 24 காலை 10:00 மணிக்கு நடக்கிறது.
அமைச்சர் முத்துசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி., பிரகாஷ், மேயர் நாகரத்தினம் ஆகியோர் கண்காட்சியை தொடங்கி வைக்கின்றனர். இந்த கண்காட்சி, உங்கள் கனவு இல்லத்தின் நுழைவு வாயில் என்ற தலைப்பில் இரு நாட்கள் நடக்கிறது. ரூ.10 லட்சம் முதல், 3 கோடி வரையிலான வீடுகள், வீட்டு மனைகள் தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இங்கு வீடு, வீட்டு மனைகள் முன்பதிவு செய்பவர்களுக்கு விலையில் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் சிறப்பு சலுகை அளிக்கப்படும். இவ்வாறு கூறினார். ஈரோடு மாவட்ட தலைவர் ஈஸ்வரன், பொருளாளர் ராஜன், திட்ட இயக்குனர்கள் ஜெய பிரசாத், செல்வராஜ், ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.